Archive

Archive for the ‘புதுச்சேரி’ Category

எழுத்து மாற்றம் செய்யப் போவதில்லை என கொள்கை முடிவெடுத்து தமிழக அரசு அறிவிக்க வேண்டுகோள்!

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பில், 19-05-2010 புதன் காலை 11.00 மணியளவில் புதுச்சேரி பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த சந்திப்பில் வெளியிடப்பட்ட செய்தி:

கோவையில் நடைபெற உள்ள உலகத் செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப் போவதில்லை என மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தருமான ம.ராஜேந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளதற்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த அறிவிப்பு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த 7.10.2010 அன்று வெளியான மாலை செய்தித்தாள் ஒன்றில் தமிழக அரசு எழுத்துச் சீர்திருத்தம் செய்யப் போவதாகவும், அதற்கென தனிக் குழு ஒன்று அமைத்துள்ளதாகவும் செய்தி வெளியானது. இந்த செய்தி உலகம் முழுவதும் உள்ள தமிழ் மொழியின்பால் பற்றுக் கொண்ட அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.

தமிழில் 18-ஆம் நூற்றாண்டில்தான் முதன் முதலில் வீரமாமுனிவர் எழுத்துச் சீர்திருத்தம் செய்தார். அதன் பின்னர் தந்தை பெரியார் அவர்கள் 1935-இல் எழுத்துச் சீர்திருத்தம் செய்தார். அவர் தமிழில் உள்ள 11 எழுத்துக்களை மாற்றி அமைத்தார். அவர் புதியதாக எழுத்துக்களை உருவாக்காமல் ஏற்கனவே இருந்த தமிழ் எழுத்துக்களை வைத்து சில மாற்றங்களை செய்தார். மொத்த தமிழ் எழுத்துக்களில் அவர் செய்த சீர்திருத்தம் வெறும் 4 விழுக்காடுதான்.

தற்போது கொண்டு வரப்படும் இந்த எழுத்து மாற்றம் முன்னாள் துணைவேந்தர் வா. செ. குழந்தைசாமி அவர்களால் முன்மொழியப்பட்டது. அதாவது உயிர்மெய் இகர, ஈகார, உகர, ஊகார எழுத்துக்கள் 72–க்கும் மாற்றாக புதிய குறியீடுகளைப் பயன்படுத்த வேண்டுமென கூறுகிறார்.இதன்படி மாற்றம் செய்தால் அது தமிழில் 80 விழுக்காடு சொற்களும் 59 சதவிகித எழுத்துக்களும் மாறும் என ஆய்வாளர்கள் கணக்கிட்டு கூறியுள்ளனர். இது ஒட்டு மொத்த தமிழ் மொழியையே மாற்றுவதாகும்.

இவ்வாறு தமிழில் எழுத்து மாற்றம் கொண்டு வந்தால் பல்லாயிரக்கணக்கான அரிய தமிழ் நூல்கள், இணையத்தில் உள்ள அரிய தலவல்கள் பயனற்றுப் போகும் ஆபத்துள்ளது. குறைந்த படிப்பறிவு பெற்றவர்கள் முற்றிலும் கல்லாதவர்கள் ஆவார்கள். இந்த எழுத்து மாற்றம் வந்தால் கணினியில் எளிதில் பயன்படுத்தக் கூடிய மொழியாக தமிழ் மாறும் எனக் கூறுவதையும் கணினி வல்லுநர்கள் ஆதரத்துடன் மறுக்கின்றனர்.

தமிழக அரசின் இந்த எழுத்து மாற்ற அறிவிப்புக்கு உலகத் தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் ஒரு அங்கமாக புதுச்சேரியில் கடந்த 16-ஆம் நாளன்று ஒரு நாள் தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு நடத்தினோம். இதில் தமிழக அளவிலும், உலக அளவிலும் புகழ் பெற்ற பல்துறை தமிழறிஞர்கள், தமிழ் அமைப்பினர், கணினி வல்லுநர்கள் உரையாற்றினர். இம்மாநாட்டில், தமிழ் எழுத்து மாற்ற முயற்சியை கைவிட வேண்டுமென தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த 17-ஆம் நாளன்று, உலகத் செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப் போவதில்லை என மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தருமான ம. ராஜேந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் மற்றும் உலக அளவில் தமிழ் ஆர்வலர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.

மேலும், தமிழக அரசு எழுத்து மாற்றம் செய்யப் போவதில்லை என கொள்கை முடிவெடுத்து அதனை முதல்வரோ அல்லது தொடர்புடைய துறை அமைச்சரோ அறிவிப்பு செய்து இந்த சர்ச்சைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

இரா. சுகுமாரன், ஒருங்கிணைப்பாளர், கோ. சுகுமாரன், அமைப்புக் குழு உறுப்பினர், பேராசிரியர் நா. இளங்கோ, அமைப்புக் குழு உறுப்பினர், ம. இளங்கோ, அமைப்புக் குழு உறுப்பினர், தமிழநம்பி, ஒருங்கிணைப்பாளர், விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்பு.

Puduvaibloggers urge TN CM not to reform Tamil letters – UNI

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு 19-05-2010 புதன் கிழமை காலை 11.00 மணியளவில் புதுச்சேரி பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்தது. தமிழ் எழுத்துமாற்ற அறிவிப்பு செம்மொழி மாநாட்டில் அறிவிக்கவில்லை என அறிவித்த செம்மொழி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும் தஞ்சை பல்கலைக்கழக துணைவேந்தருமான திரு. ம.இராஜேந்திரனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. செம்மொழி குழு அறிவித்தாலும் தமிழக அரசு அறிவிக்கும் ஒரு வாய்ப்பு உள்ளதால் தமிழக அரசும் எழுத்து மாற்றத்தை செய்யமாட்டோம் அறிவிக்க வேண்டும் என கோரி இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ந்தது. இந்த சந்திப்பை ஒட்டி யு.என்.ஐ நிறுவனம் வெளியிட்ட செய்தியை http://news.webindia123.com இணைய பக்கம் எடுத்து வெளியிட்டுள்ளது அதன் இணைப்பு இங்கே அளிக்கப்பட்டுள்ளது.

Puduvaibloggers  urge TN CM not to reform Tamil letters

India Puduvaibloggers urge TN CM not to reform Tamil letters

Puducherry | Wednesday, May 19 2010 IST

Thanking convenor of the Tamil Classical Language Conference and Vice-Chancellor of the Tamil University M Rajendran for his statement that no statement on the reforms on Tamil letters will be there in the conference, the Puduvaibloggers today urged the Tamil Nadu Chief Minister M Karunanidhi to take such a decision. In a statement here today, Mr R Sugumaran, convenor of the bloggers, said they were shocked to see a news item in an eveninger that Tamil Nadu Governemnt was to bring in certain reforms on Tamil letters.

Veeramamunivar had initiated the Tamil letter reforms in the 18th centuery followed by Thanthai Periyar in 1935.

Any further changes in the Tamil letters would make several informations in Tamil in web sites and several books useless.

It would also make partially literate as illiterate, he added.

– (UNI) — 19MS50.xml

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் முயற்சிக்கு வெற்றி!

தமிழக அரசு தமிழ் எழுத்து மாற்றம் செய்யப் போவதாக 07.01.2010 நாளிட்ட மாலை மலர் செய்தித் தாளில் ஒரு செய்தி வெளியானது.

அந்த செய்தி: ” சென்னை-7, தமிழ் மொழியை வளப்படுத்தும் வகையில் தமிழ் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்களை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.அந்தக் குழு அரசுக்கு சில பரிந்துரைகளை செய்துள்ளது.”

இந்த செய்தி வெளிவந்து நான்கு மாதங்களுக்கு மேலாகியும் தமிழக அரசு எந்தவித மறுப்பும் வெளியிடாத நிலையில் கட்டாயம் இந்த எழுத்து மாற்றம் நடக்கும் எனக் கருதி உலகம் முழுவதுள்ள தமிழர்கள்  இந்த முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

சென்னையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கூட்டம் நடந்தது. அதன் பின்னர், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பில் ஒரு மாநாடு நடத்தலாம் என கருத்து முன் வைக்கப்பட்டு, அதனை அமைப்புக் குழு விரிவாக விவாதித்து முடிவு செய்தது.

அதனைத் தொடர்ந்து, கடந்த 16.05.2010 அன்று புதுச்சேரியில் தமிழ் எழுத்து மாற்ற எதிர்ப்பு ஒரு நாள் மாநாடு நடத்தப்பட்டது. இம்மாநாட்டில், தமிழ் அறிஞர்கள், கணினி வல்லுநர்கள், தமிழ் இயக்கத்தினர் என அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.  இதில், கலந்துக் கொண்ட அனைவரின் அதாரவுடன் ‘தமிழ் எழுத்து மாற்றத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்’ உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இம்மாநாட்டின் செய்திகளை விரிவாக செய்தித்தாள்கள் வெளியிட்டன. குறிப்பாக தினமணி, தினகரன், இந்தியன் எக்ஸ்பிரஸ்  உள்ளிட்ட நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன.

இதனைத் தொடர்ந்து,  தமிழக அரசு சார்பில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தருமான ம.ராஜேந்திரன் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு பொருண்மைகளில் அளிக்கப்படவுள்ளன.​ இம்மாநாட்டில் எழுத்துச் சீர்திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று யாரும் தெரிவிக்கவில்லை.​ அறிஞர்கள் கூடி ஆய்வின் பொருள் பற்றி விவாதிக்கும் அரங்காகத் தான் செம்மொழி மாநாடு
அமையும்.” எனக் கூறியுள்ளார்.

இது புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் உள்ளிட்ட உலகம் முழுவதும் எழுத்து மாற்ற முயற்சிக்கு எதிராக குரல் கொடுத்தவர்களுக்கு கிடத்த வெற்றியாகும்.

இந்த அறிவிப்பை காலத்தே செய்த தமிழக அரசுக்கும், செம்மொழி மாநாட்டு குழுவினர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு – தீர்மானங்கள்!

எழுத்து சீர்திருத்தம் குறித்து எந்த அறிவிப்பு வெளியிடவில்லை – ம. ராஜேந்திரன் மறுப்பு!

எழுத்து சீர்திருத்தம் குறித்து எந்த அறிவிப்பு வெளியிடவில்லை – ம. ராஜேந்திரன் மறுப்பு !

எழுத்துச் சீர்திருத்தம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை: ம.ராஜேந்திரன் மறுப்பு

சென்னை,​​ மே 17: செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று யாரும் தெரிவிக்கவில்லை என்று உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும்,​​ தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான ம.​ ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை ​(மே 16) நடைபெற்ற தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாட்டில் பேசிய தமிழறிஞர் ஆர்.​ இளங்குமரனார்,​​ ‘கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.​ அதனால் தமிழுக்கு பின்னடைவு ஏற்படும்’ என்று கூறியிருந்தார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் ம.​ ராஜேந்திரன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு பொருண்மைகளில் அளிக்கப்படவுள்ளன.​ இம்மாநாட்டில் எழுத்துச் சீர்திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று யாரும் தெரிவிக்கவில்லை.​ அறிஞர்கள் கூடி ஆய்வின் பொருள் பற்றி விவாதிக்கும் அரங்காகத் தான் செம்மொழி மாநாடு அமையும்.

தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு – தினகரன் செய்தி

புதுச்சேரி, மே 17: புதுவை பாரதி பூங்கா அருகில் உள்ள வணிக அவையில் தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு நடந்தது.
வலைப்பதிவர் வெங்கடேஷ் வரவேற்றார். வலைப்பதிவர் சிறகம் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன் தலைமை தாங்கினார். கழக இலக்கிய செம்மல் இளங்குமரன் மாநாட்டை தொடங்கி வைத்தார்.

மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக நூல் வெளியீட்டு விழா நடந்தது. இளங்குமரன் தொகுத்த தமிழ் வரிவடிவ சீர்திருத்தமா? சீரழிப்பா? என்ற நூலை பேராசிரியர் தங்கப்பா வெளியிட்டார். மக்கள் உரிமை கூட்டமைப்பு பொதுக்குழு உறுப்பினர் கோ.சுகுமாரன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.

மாநாட்டில் 2 அமர்வுகள் நடந்தது. முதல் அமர்வுக்கு நா.இளங்கோ தலைமை தாங்கினார். ஓவியர் ராசராசன், இளங்கோ, அருணபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறியாளர் மணிவண்ணன், முனைவர் சங்கரபாண்டியன், குமரேசன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

இரண்டாம் அமர்வுக்கு விழுப்புரம் வலைப்பதிவர் தமிழ்நம்பி தலைமை தாங்கினார். வீரமோகன், பிரபாகரன், மார்கண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் செல்வகுமார், நாக.இளங்கோவன், பூங்குன்றன், நற்குணன், அரிமாப்பாண்டியன், தமிழமல்லன், தமிழ்மணி, தாமரைக்கோ, நடராசன், திருநாவுக்கரசு,  ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

மோகனகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Scholars oppose reformation in Tamil Script – The New Indian Express

தமிழ் எழுத்து வடிவ மாற்​றம் தமிழ் அறிந்​த​வர்​கள் மீண்​டும் புதிய தமிழை படிக்க வேண்​டும்

தினமணி செய்தி

தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாட்​டில் புல​வர் இரா.இளங்​கு​ம​ர​னார் ​(இட​மி​ருந்து 4-வது)​ தொகுத்த தமிழ் வரி​வ​டிவ சீர்​தி​ருத்​தமா சீர​ழிப்பா? என்ற நூலை பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா (இடமிருந்து 3-வது) வெளியிட அதைப் பெறுகிறார் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் கோ.சுகுமாறன் (வலமிருந்து 2-வது).

புதுச்​சேரி,​​ மே 16:​ தமிழ் எழுத்து வடிவ மாற்​றம் கொண்டு வந்​தால் தமிழ் அறிந்​த​வர்​கள் மீண்​டும் புதிய தமிழை படிக்க வேண்​டும் என்று தமி​ழ​றி​ஞர் ஆர்.இளங்​கு​ம​ர​னார் தெரி​வித்​துள்​ளார்.

பு​துச்​சே​ரி​யில் புதுச்​சேரி வலைப்​ப​தி​வர் சிற​கம் அமைப்பு சார்​பில் தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு,​​ புதுவை வணிக அவை​யில் ஞாயிற்​றுக்​கி​ழமை நடந்​தது.​ இ​தில் ஆர்.இளங்​கு​ம​ர​னார் பேசி​யது:​ தமி​ழக அரசு வரும் ஜூன் மாதத்​தில் கோவை​யில் உல​கத் தமிழ் செம்​மொழி மாநாடு நடத்த உள்​ளது.​ இ​தில் தமிழ் மொழி​யில் எழுத்து சீர்​தி​ருத்​தம் குறித்து அறி​விப்பு வெளி​யி​டப்​ப​டும் என செய்தி வெளி​யா​கி​யுள்​ளது.​ அவ் ​வாறு சீர்​தி​ருத்​தம் கொண்டு வந்​தால் தமிழ் அறிந்​த​வர்​கள் மீண்​டும் புதிய தமிழை படிக்க வேண்​டிய நிலை உள்​ளது.​ தமி​ழில் குறைந்த கல்​வி​ய​றிவு பெற்​ற​வர்​கள் முற்​றி​லும் கல்​லா​த​வர்​க​ளாக மாற நேரும்.

த​மி​ழக அர​சின் இந்த முயற்​சிக்கு பல்​வேறு தரப்பி​லி​ருந்து எதிர்ப்பு கிளம்​பி​யுள்​ளது.​ உலக அள​வில் தமிழ் அறி​ஞர்​க​ளும்,​​ கணினி வல்​லு​நர்​க​ளும் இதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்​துள்​ள​னர்.​ த​மி​ழக அரசு இது குறித்து எந்த விளக்​க​மும் இது​வரை அளிக்​க​வில்லை.​ தமிழ் எழுத்தை மாற்​றும் முயற்​சி​யில் முன்​னாள் துணை வேந்​தர் வா.செ.குழந்​தை​சாமி முதன்​மை​யாக உள்​ளார்.

தினமணி செய்தி அ​வர் எழு​தி​யுள்ள கட்​டு​ரை​யின்​படி உயிர் மெய் இகர,​​ ஈகார உகர,​​ ஊகர எழுத்​துக்​கள் 72-க்கும் மாற்​றாக குறி​யீ​டு​க​ளு​டன் கூடிய எழுத்​துக்​கள் பயன்​ப​டுத்த வேண்​டு​மென அறி​கி​றோம்.​ இ​தன்​படி எழுத்து மாற்​றம் செய்​தால் தமிழ் மொழி அறி​வி​யல் மொழி​யா​க​வும்,​​ கணி​னி​யில் எளி​தில் பயன்​ப​டக்​கூ​டிய மொழி​யா​க​வும்,​​ வளர்ச்சி பெறும் என்று கருத்து முன்​வைக்​கப்​பட்​டுள்​ளது.

72 எழுத்​துக்​க​ளில் மாற்​றம் என்​பது தமி​ழில் 59 சத​வீ​தம் மாற்​றத்தை ஏற்​ப​டுத்​தம் என்று ஆய்​வா​ளர்​கள் கணக்​கிட்டு கூறி​யுள்​ள​னர்.​ 59 சத​வீத எழுத்து மாற்​றம் தமிழ் மொழி​யையே மாற்​றி​வி​டும்.

இ​த​னால் தமி​ழில் ஏற்​கெ​னவே உள்ள பல்​லா​யி​ரக்​க​ணக்​கான அரிய நூல்​க​ளும்,​​ இணை​ய​த​ளத்​தில் உள்ள பல்​துறை சேர்ந்த ஆயி​ரக்​க​ணக்​கான பக்​கங்​க​ளில் உள்ள செய்​தி​க​ளும் பய​னற்று போகும்.

உ​லக அள​வில் பல்​வேறு நாடு​க​ளில் தமி​ழர்​கள் உள்ள நிலை​யில் தமிழ்​நாட்​டில் மட்​டும் இந்த எழுத்து மாற்​றம் தமி​ழர்​க​ளி​டையே பிரி​வி​னையை ஏற்​ப​டுத்​தும்.​ தமிழ்​நாட்டு தமி​ழர்​களை உல​கத் தமி​ழர்​க​ளி​ட​மி​ருந்து தனி​மைப்​ப​டுத்​தும்.

இ​த​னால் தமிழ் மொழி​யின் வளர்ச்சி பின்​ன​டை​யும் என்​ப​தோடு,​​ தமி​ழர்​க​ளின் நிலை மேலும் பின் தள்​ளப்​ப​டும்.​ எழுத்து மாற்​றம் குறித்து வற்​பு​றுத்​து​வோர் கூறும் கார​ணங்​கள் எது​வும் ஏற்​கும்​ப​டி​யாக இல்லை

எ​ழுத்து மாற்​றத்​தால் கணிப்​பொ​றி​யில் உழைப்பு குறை​யும்,​​ விரை​வாக செயல்​பட முடி​யும் என கூறப்​ப​டும் கருத்தை கணினி வல்​லு​நர்​கள் சான்​று​க​ளு​டன் மறுத்​துள்​ள​னர்

த ​மிழ் எழுத்து வடி​வத்​தில் மாற்​றம் கொண்டு வர எவ்​வித கார​ண​மும் இல்​லா​த​போது,​​ தமி​ழக அரசு இவ்​வா​றாக முயற்சி மேற்​கொள்​வது தமிழ் மீது கொண்டுள்ள பற்று கார​ண​மல்ல.

மா​றாக பல்​வேறு அர​சி​யல் கார​ணங்​க​ளுக்​கா​க​வும்,​​ தன்​னல விளம்​ப​ரங்​க​ளுக்​கா​க​வும் தான் என்​ப​தில் மாற்​றுக் கருத்​தில்லை.​ எ​ழுத்து மாற்​றம் செய்​ய​வேண்​டு​மா​னால் பல்​துறை சேர்ந்த அறி​ஞர்​கள் கொண்ட குழு அமைத்து,​​ மிக நுணுக்​க​மாக ஆராய்ந்து படிப்​ப​டி​யாக மக்​கள் ஏற்​கும்​படி செய்ய வேண்​டும்.​ ÷அதை விடுத்து அவ​சர கோலத்​தில் அள்​ளித் தெளித்​தது போல் தமிழ் எழுத்து மாற்​றம் செய்​வது என்​பதை ஏற்​றுக்​கொள்ள முடி​யாது என்​றார்.

இ​வர் எழு​திய தமிழ் வரி​வ​டிவ சீர்த்​தி​ருத்​தமா சீர​ழிப்பா என்ற நூலை பேரா​சி​ரி​யர் ம.லெ.தங்​கப்பா வெளி​யிட,​​ மக்​கள் உரிமை கூட்​ட​மைப்பு செய​லா​ளர் கோ.சுகு​மா​ரன் பெற்​றுக் கொண்​டார்.

வி​டியோ கான்​ப​ரன்​சிங் முறை​யில் அமெ​ரிக்​கா​வில் உள்ள தமிழ்​ம​ணம் வலைப்​ப​தி​வு​க​ளின் திரட்​டி​யின் நிர்​வாகி சொ.சங்​க​ர​பாண்டி,​​ சவுதி அரே​பி​யா​வில் உள்ள பொறி​யா​ளர் நாக.இளங்​கோ​வன் உள்​ளிட்​டோர் பேசி​னர்.​÷பு​துவை வலைப்​ப​தி​வர் சிற​கம் ஒருங்​கி​ணைப்​பா​ளர் ரா.சுகு​மா​ரன்,​​ பேரா​சி​ரி​யர் நா.இளங்கோ,​​ மென்​பொ​ருள் வல்​லு​நர் க.அரு​ண​பா​ரதி,​​ பொறி​யா​ளர் மு.மணி​வண்​ணன் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​ட​னர்.

தமிழ் எழுத்து வடிவ மாற்​றம்​ நம் வீட்​டுக்கு நாமே தீ வைப்​ப​தற்கு சமம்-தமிழ் மணம் சொ.சங்​க​ர​பாண்டி- தினமணி செய்தி

புதுச்​சேரி,​​ மே 16:​ தமிழ் எழுத்து வடிவ மாற்​றம் நம் வீட்​டுக்கு நாமே தீ வைப்​ப​தற்கு சமம்.​ என்று தமிழ் மணம் வலைப்​ப​தி​வு​கள் திரட்​டி​யின் நிர்​வாகி சொ.சங்​க​ர​பாண்டி தெரி​வித்​தார்.

தமி​ழில் கொண்​டு​வ​ரப்​ப​ட​வி​ருக்​கும் எழுத்து மாற்​றம் என்​பது தமிழ் படிப்​போ​ருக்கு இடை​யூ​றாக இருக்​கும் என​வும் அவர் எச்​ச​ரித்​தார்.

பு​துச்​சேரி வலைப்​ப​தி​வர் சிற​கம் அமைப்பு சார்​பில் தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு புதுச்​சே​ரி​யில் ஞாயிற்​றுக்​கி​ழமை நடை​பெற்​றது.

இ​தில் அமெ​ரிக்​காவி​லி​ருந்து விடியோ கான்​பி​ரன்​சிங் மூலம் சொ.சங்​கர​பாண்டி பேசி​யது:

த​மிழ் எழுத்​து​கள் சிர​ம​மாக இருக்​கி​றது என்று அறி​வி​யல் பூர்​வ​மா​கவோ,​​ புள்ளி விவ​ரங்​கள் மூல​மா​கவோ தமி​ழக அரசு நிரூ​பிக்​க​வில்லை.​ கற்​ப​னை​யா​கவே முடி​வெ​டுக்​கப்​பட்டு,​​ ​ தமிழ் எழுத்து வடி​வத்தை எளிமை படுத்​து​கி​றோம் என்று,​​ எழுத்து வடி​வத்தை மாற்ற தமி​ழக அரசு முடி​வெ​டுத்​துள்​ளது.

இது நம் வீட்​டுக்கு நாமே தீ வைப்​ப​தற்கு சமம்.​ வட அமெ​ரிக்க தமிழ்ச்​சங்க பேரவை என்​பது பெரும்​பா​லான தமிழ்ச் சங்​கங்​க​ளின் கூட்​ட​மைப்பு.​   உலக தமிழ் அமைப்பு,​​ தமி​ழர்​க​ளின் உரிமை பிரச்​னை​கள் குறித்து போரா​டக்​கூ​டி​யது.

அ​மெ​ரிக்​கா​வில் எங்​கள் அமைப்பு சார்​பில் தமிழ் மொழி கற்​றுக்​கொ​டுக்​கப்​ப​டு​கி​றது.​ இதில் படிக்​கும் மாண​வர்​க​ளுக்கு ஆண்​டுக்கு 40 மணி நேரம் வகுப்பு என்று நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.​   ஆனால்,​​ வகுப்​பெ​டுக்க நூலக அறை கிடைக்​கா​விட்​டாலோ,​​ பணிப் பொழிவு இருந்​தாலோ,​​ வகுப்​பு​கள் நடை​பெ​றாது.

ஆண்​டுக்கு 30 மணி நேரத்​துக்​கும் குறை​வா​கவே வகுப்​பு​கள் நடக்​கும்.​ புலம்​பெ​யர்ந்த தமி​ழர்​க​ளின் குழந்​தை​கள் இங்கு அதிக அள​வில் படிக்​கின்​ற​னர்.​ அவர்​கள் பள்​ளி​க​ளி​லும்,​​ சக மாண​வர்​க​ளி​ட​மும் ஆங்​கி​லத்​தில்​தான் பேசு​கி​றார்​கள்.​ பெற்​றோர்​கள் கூட குறைந்த எண்​ணிக்​கை​யி​லேயே குழந்​தை​க​ளு​டன் தமிழ் பேசு​கி​றார்​கள்.

இ​ருப்​பி​னும் இவர்​கள் ஓர் ஆண்​டி​லேயே தமிழை எழுத,​​ படிக்க எளி​தில் கற்​றுக்​கொள்​கின்​ற​னர்.​ இவர்​கள் இது​வரை தமிழ் எழுத கடி​ன​மாக உள்​ளது என்று கூறி​ய​தில்லை.

த​மி​ழர்​களை திரு​ம​ணம் செய்து கொண்ட வேற்று மொழி​யி​னர் கூட தமிழ் கற்க வரு​கி​றார்​கள்.​ அவர்​க​ளும் தமிழ் எழுத சிர​மம் என்று கூறி​ய​தில்லை.​ ஜப்​பான்,​​ சீன மொழி​க​ளில் 1000-க்கும் மேற்​பட்ட எழுத்​து​கள் உள்​ளன.​ ÷இ​வை​களை எழு​தும் போது அவர்​க​ளுக்கு சிக்​கல் வந்​த​தில்லை.​ இணை​ய​த​ளத்​தில் கூட தங்கு தடை​யின்றி புழங்​கு​கின்​ற​னர்.

எ​ழுத்து மாற்​றம் என்​பது தமிழ் வழி கற்​கும் அப்​பாவி மாண​வர்​களை கடு​மை​யாக பாதிக்​கும்.​ எனவே இதனை அனு​ம​திக்​கக் கூடாது என்​றார் சொ.சங்​க​ர​பாண்டி.

செüதி அரே​பி​யா​வைச் சேர்ந்த பொறி​யா​ளர் நாக.இளங்​கோ​வன் விடியோ கான்​ப​ரன்​சிங்​கில் பேசு​கை​யில்,​​ சீன மொழி​யில் மாற்​றம் கொண்டு வரும்​போது,​​ அனைத்து சீன மொழி சார்ந்த அமைப்​பி​ன​ரை​யும்,​​ கணினி வல்​லு​நர்​க​ளை​யும் கலந்​தா​லோ​சித்து உரு​வாக்​கி​னர்.

த​மிழ் எழுத்து மாற்​றம் என்ற கருத்​தில அவ்​வாறு ஆலோ​சிக்​க​வில்லை.​ வீர​மா​மு​னி​வர் தமிழ் எழுத்​தில் 6.25 சத​வீ​தம் மாற்​றம் கொண்டு வந்​தார்.​    தந்தை பெரி​யார் 4 சத​வீ​தம் மாற்​றம் கொண்டு வந்​தார்.​ ஆனால்,​​ தமி​ழக அரசு கொண்டு வரும் எழுத்து மாற்​றம் 59 சத​வீ​தம் இருக்​கும் எனக் கூறப்​ப​டு​கி​றது.​ இது சிறந்​த​தல்ல என்​றார்.

தமிழ் எழுத்து வடிவ மாற்றம் எதிர்ப்பு மாநாடு- நிகழ்ச்சி நிரல்

தமிழ் எழுத்து வடிவ மாற்றம் எதிர்ப்பு மாநாடு

16-05-2010  ஞாயிறு

காலை 10 முதல் மாலை 6 மணிவரை

வணிக அவை (பாரதி பூங்கா எதிரில்), புதுச்சேரி

…………………………………………

தமிழ் எழுத்து வடிவ மாற்றம் எதிர்ப்பு மாநாடு

தொடக்க நிகழ்வு

காலை 10.00 மணி முதல் 11.30 மணிவரை

தலைமை”

திரு.இரா.சுகுமாரன் அவர்கள்

ஒருங்கிணைப்பாளர், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

வரவேற்பு:

திரு.ஏ.வெங்கடேஷ் அவர்கள்,

திரட்டி

மாநாட்டைத் தொடக்கி வைத்து உரை:

முதுமுனைவர் -செந்தமிழ் அந்தணர்- கழக இலக்கிய செம்மல்

திரு. இரா. இளங்குமரனார் அவர்கள்

நூல் வெளியீடு:

தமிழ் வரிவடிவ சீர்திருத்தமா? சீரழிப்பா?.

தொகுப்பு: புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள்

வெளியிடுபவர் :

பேராசிரியர் ம. இலெ.தங்கப்பா அவர்கள்

முதல் படி பெறுபவர்

திரு கோ.சுகுமாரன்

செயலர், மக்கள் உரிமைக்கூட்டமைப்பு – பொதுக்குழு உறுப்பினர், உத்தமம், (INFITT).

முற்பகல் 11.30 மணி முதல் 1.30 மணிவரை

முதல் அமர்வு

தலைமை

பேராசிரியர் நா.இளங்கோ அவர்கள், புதுச்சேரி

முன்னிலை:

திரு ஓவியர் இரா.இராசராசன் அவர்கள்

திரு ம.இளங்கோ, அவர்கள்

திரு க. அருணபாரதி அவர்கள்,

மென்பொருள் வல்லுநர்,

கருத்துரை:

திரு.இராம.கி அவர்கள் பொறியாளர்

பொதுக்குழு உறுப்பினர், உத்தமம் INFITT), சென்னை

திரு மணி.மு.மணிவண்ணன் அவர்கள், பொறியாளர் சென்னை,

முனைவர் சொ.சங்கரபாண்டி அவர்கள்

தமிழ்மணம்- வலைப்பதிவுகளின் திரட்டி, அமெரிக்கா,

திரு விருபா.குமரேசன் அவர்கள்

விருபா.காம், சென்னை

———————————————

உணவு இடைவேளை: பகல் 1.30 மணிமுதல் 2.30 மணிவரை

மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

———————————————

பிற்பகல் அமர்வு

பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை

தலைமை:

திரு.தமிழ நம்பி அவர்கள்

விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்பு

முன்னிலை:

திரு.வீரமோகன் அவர்கள்

திரு. சீத்தா .பிரபாகரன் அவர்கள்,

திரு.ஓவியர்,பா.மார்கண்டன் அவர்கள்

கருத்துரை:

பேராசிரியர். செல்வக்குமார் அவர்கள்,

வாட்டலூ பல்கலைக்கழகம். கனடா,

திரு. நாக.இளங்கோவன், சவுதி அரேபியா,

திரு. மா,பூங்குன்றன் அவர்கள்,

தென்மொழி, சென்னை.

திரு.சுப.நற்குணன் அவர்கள், மலேசியா,

திரு, சீனு,அரிமாப்பாண்டியன் அவர்கள்,

செயலர், தனித்தமிழ்க் கழகம, புதுச்சேரி,

திரு. க.தமிழமல்லன் அவர்கள்

தலைவர், தனித் தமிழ் இயக்கம் புதுச்சேரி,

திரு.ந.மு தமிழ்மணி அவர்கள்

அமைப்பாளர் , செந்தமிழர் இயக்கம்,புதுச்சேரி

திரு. கோ.தாமரைக்கோ அவர்கள்,

பாவலர் அரங்க. நடராசன் அவர்கள்

தமிழ்வளர்ச்சி நடவடிக்கைக்குழு, புதுச்சேரி

திரு. ப. திருநாவுக்கரசு அவர்கள்

தலைவர், நண்பர்கள் தோட்டம், புதுச்சேரி

திரு. எழில் . இளங்கோ அவர்கள்

தமிழியக்கம், விழுப்புரம்,

நிறைவு நிகழ்வு

மாநாட்டு நிறைவுரை:

பேராசிரியர் ம. இலெ.தங்கப்பா அவர்கள்

நன்றியுரை:

திரு. இரா. மோகனகிருஷ்ணன் அவர்கள்

புதுவை.காம்

வெளிநாடுகளில் இருந்து உரையாற்றும் அறிஞர்களின் உரை இணைய வழியாக  நேரடியாக ஒளி/ஒலிபரப்பப்படும்.

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

20,4- வது தெரு விரிவாக்கம், அன்னைதெரசா நகர்

மூலக்குளம் புதுச்சேரி -605010.பேசி: +91 94431 05825

மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com, இணையம் : www.pudhuvaitamilbloggers.org

வலைப்பூ : www.puduvaibloggers. blogspot.com

தமிழ்க் கணினியும் இணையப் பயன்பாடும் கருத்தரங்கம் – நிறைவுற்றது

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “தமிழ்க் கணினியும் இணையப் பயன்பாடும்” தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மைய தமிழ்த்துறை பேராசிரியர் நா.இளங்கோ தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சி தொடக்கத்தில் சீத்தா பிரபாகரன் வரவேற்புரை நிகழ்த்தினார்

இரா.சுகுமாரன் வலைப்பதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் சிறகம் அமைப்பின் நோக்கம் பற்றியும் அதன் வளர்ச்சிகள் பற்றி எடுத்துரைத்தார்.


கோ.சுகுமாரன் “தமிழில் வலைப்பதிவுகள்” தொடங்குவது பற்றி கருத்துரையாற்றினார். வலைப்பதிவு உருவாக்குதலைப் பற்றியும் தமிழ் வலைப்பதிவு திரட்டியான “தமிழ்மணம்”, “தமிழ்வெளி”, “திரட்டி” உள்ளிட்ட தமிழ் வலைப்பதிவு திரட்டிகளில் இணைத்தால் மட்டுமே உங்கள் பதிவை அதிகமானோர் படிப்பர் என்பதையும் விளக்கினார்.

இரா.மோகனகிருஷ்ணன்

“தமிழில் எழுத்துருக்கள் வகைகள் பற்றி கருத்துரையாற்றுகிறார் தமிழில் எழுத்துருக்கள் பற்றியும், பல்வேறு வகைப்பட்ட வகைகள் பற்றியும் (யுனிகோடு, தாம், தாப் உள்ளிட்டவை) பற்றியும் தமிழ் விசைப்பலகை தமிழ் 99 பற்றியும் பொனடிக் எழுத்துக்கள் பயன்படுத்துவதில் உள்ள குறைகள் உள்ளிட்டவைகளை எடுத்துரைத்தார்.

க.அருணபாரதி

தமிழில் மென்பொருட்கள் தமிழில் மென்பொருட்கள் பற்றியும், விண்டோசு விஸ்டாவில் தமிழ், ஆபீஸ் 2007 இல் தமிழ் மற்றும் ஓப்பன் ஆபீஸ் ஆகியவற்றில் தமிழில் கருவிப் பட்டைகள் உள்ளதையும் தமிழர்களாகிய நாம் தமிழிலேயே இந்த மென்பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அருணபாரதி தான் உருவாக்கிய தமிழில் தட்டச்சு செய்வதற்கான மென்பொருளை நிறுவி தமிழ் தட்டச்சு செய்து காண்பித்தார். விஸ்டா, விண்டோசு 7 ஆகியவற்றில் தட்டச்சு செய்து காண்பித்தார். முதலில் தமிழ்-99 விசைப் பலகையில் இந்த மென்பொருள் உருவாக்கப் பட்டுள்ளது. சோதனையில் இருப்பதால் தேவையானோர் வாங்கி சோதித்து அறியலாம். பலர் இயக்கம் பற்றி திருப்தி தெரிவித்த பின்னர் வெளியிடலாம் என முடிவு செய்துள்ளோம்.

இந்த மென்பொருளின் உள்ளே என்ன “கோடிங்” பயன்படுத்தப் பட்டுள்ளது என்பது வெளிப்படையாக அறிவிக்கப்படும். அல்லது தேவையானோருக்கு அளிக்கப்படும். இதில் தாங்கள் விரும்பியவாறு விசைப் பலகையை அவர் மாற்றி கொள்ளும் வகையிலும் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம். என அருண பாரதி தெரிவித்தார்.

எ.சீனுவாசன் மற்றும் நித்தியக்குமார் தமிழில் இயங்கு தளங்கள் விண்டோஸ் எக்ஸ்.பி, விஸ்டா, உபுண்டு உள்ளிட்டவைகளை தமிழில் பயன்படுத்துவது தொடர்பாக விளக்கினர். நித்தியகுமார் உபுண்டு இயங்குதளத்தை கணினியில் நிறுவி அதில் தமிழ் பயன்பாடு பற்றி பேசினார்.

சீனுவாசன் பாதுகாப்பான இணையப் பயன்பாடு குறித்து கவனமாக இருக்க வேண்டிய விசயங்கள் பற்றியும் தெரிவித்தார்.

இதில் விழுப்புரம், கடலூர், விருத்தாசலம், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் தமிழ நம்பி வலைப்பதிவர் பட்டறை நடத்தப்பட்டதால் பயன் பெற்றோர்களைப் பற்றியும் தங்கள் பகுதியின் வலைப்பதிவர்கள்  பற்றியும்எடுத்துரைத்தார்.

வருகை தந்த அனைவருக்கும் தமிழ்மணம் ஏற்பாடு செய்து அளித்த துண்டறிக்கையும், தமிழ்மணம் பெயர் பதித்த எழுதுகோலும் வழங்கப்பட்டது,

நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழுனர்