Home > பதிவர் பட்டறை, புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் > புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறையில் துணைவேந்தர் பொன்னவைக்கோ பங்கேற்கிறார்

புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறையில் துணைவேந்தர் பொன்னவைக்கோ பங்கேற்கிறார்

புதுச்சேரியில் வரும் திசம்பர் 9 ஞாயிறன்று நடைபெற உள்ள வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறையின் நிறைவு விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு பொன்னவைக்கோ அவர்கள் பங்கேற்க ஒப்புதல் அளித்துள்ளார்.

 திரு பொன்னவைக்கோ அவர்கள் தமிழகத்தில் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் என்பதும், இணையத்தில் தமிழ் மொழி உரிய இடம்பெற பங்காற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. திரு பொன்னவைக்கோ அவர்கள் இப்பயிற்சிப் பட்டறையில் கலந்துக் கொண்டு உரையாற்றுவது அனைவருக்கும் பயனளிக்கும்.

 பயிற்சிப் பட்டறையில் கலந்துக் கொள்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளமைக்கு அவருக்கு “புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்” நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

  1. No comments yet.
  1. No trackbacks yet.