Archive

Archive for December, 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை – பங்கேற்போர் இறுதிப் பட்டியல்!-2007

அன்புடையீர், வணக்கம்.

“தமிழ்க் கணினி” வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறையில் கலந்துக் கொள்பவர்களின் இறுதிப் பட்டியல் இது. இப்பட்டியலில் பெயர் இடம்பெற்று பட்டறையில் கலந்துக் கொள்ள முடியாதவர்கள் அருள்கூர்ந்து உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம். பெயர் பதியாமால் பலர் வாய்ப்புக் கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க ஏதுவாக இருக்கும். பதிவு செய்து பெயர் விடுபட்டவர்கள் உடனடியாக தொடர்புக் கொள்ளவும்.

இறுதிப் பட்டியல்:

  1. திரு. பி.எஸ்.சந்திரமோன்,
  2. திரு. இரா.அ.அரசெழிலன்,
  3. திரு. மா.தமிழ்ப்பரிதி,
  4. திரு. கே. இராஜா,
  5. முனைவர் தி. நெடுங்செழியன்,
  6. திரு. செல்வமுத்துக்குமரன்,
  7. திரு. விக்ரம்,
  8. திரு. முத்துசிவகுமரன்
  9. திரு. என்.குமார்,
  10. தனலட்சுமி,
  11. எம்.ஆர்.மல்லிகா,
  12. முனைவர் எம்.இ.கிருஷ்ணகுமார்,
  13. முனைவர் எ.மணி,
  14. முனைவர் வி.மணி,
  15. திரு. சிவனந்தம்,
  16. திரு. டைடஸ்ராஜ்,
  17. திரு. எம்.இராமலிங்கம்,
  18. திரு. பாலு இரங்கநாதன்,
  19. திரு. எஸ்.பக்கிரிசாமி,
  20. திரு. இ.எழில்வசந்தன்,
  21. திரு. அருண்,
  22. திரு. எஸ்.சிவானந்தம்,
  23. திரு. எஸ்.சீனிவாசன்,
  24. சாந்தி,
  25. திரு. சையது முஸ்தபா,
  26. திரு. வைகை இராமலிங்கம்,
  27. மாலா ஜெயந்தி,
  28. திரு.ஜெயராமன்,
  29. திரு.கீழைஇலக்கியன்,
  30. திரு.வெங்கடேசன்,
  31. திரு.ஆர்.மணி,
  32. திரு.விஸ்வநாத்,
  33. திரு.டி.ஆர்.இராமலிங்கம்,
  34. திரு.இரா.முத்துராஜ்,
  35. திரு.ஆர்.ஆர்.இராஜ்குமார்,
  36. திரு.மு.பாலசுப்பிரமணியன்,
  37. திரு.சு.சண்முகசுந்தரம்,
  38. திரு.கோ.செழியன்,
  39. மேகலா செழியன்,
  40. திரு.எஸ்.சுவாமிநாதன்,
  41. திரு.இளையபாரதி,
  42. திரு.கணேஷ்,
  43. திரு.நீலவேந்தன்,
  44. திரு.எஸ்.ஆதிசங்கர்,
  45. கே.பழனிவேலு,
  46. தமிழ்ச்செல்வி புரூடஸ்,
  47. ஏ. பிரேமா ஆதிசங்கர்,
  48. எம்.இராஜாமணி,
  49. இராஜலட்சுமி,
  50. திரு.த. தண்டபாணி,
  51. திரு.அ.புகழேந்தி,
  52. திரு. தி.திருநாவுக்கரசு,
  53. திரு. சு.பாலசுந்தரம்,
  54. திரு. டி.இரவிசங்கர்,
  55. ஆர்.வித்யா,
  56. திரு. பி.கார்த்திக் ,
  57. திரு. சுந்தரமுருகன்,
  58. திரு. புதுவை யுகபாரதி,
  59. திரு. பா.திருநாவுக்கரசு,
  60. எம்.எஸ்.காந்திமேரி,
  61. மூ.சத்யா,
  62. ச.சிவப்பிரியா ,
  63. செ.சிவசங்கரி,
  64. நா.குணசுந்தரி,
  65. ஆ.தீபிகா,
  66. இரா.சானகி,
  67. இரா.கலைவாணி,
  68. தே.ஜெயந்தி,
  69. க.இரேவதி,
  70. முனைவர் இரத்தின புகழேந்தி,
  71. சி.கீதா,
  72. எ.கலைச்செல்வி,
  73. கே.இராஜகுமாரி,
  74. எ.சந்திரகலா
  75. எம்.சுபாஷினி,
  76. எம்.வெங்கடேசன்,
  77. திரு.சீ.சந்திரசேகரன்,
  78. திரு.பி.குழந்தைசாமி,
  79. திரு.வெங்கடேசபெருமாள்,
  80. திரு.ஜெ.பகிரதன்,
  81. திரு.ஜெயராஜ் தனியேல்,
  82. திரு.சுந்தர கலிவரதன்,
  83. திரு.ஆர்.சேகர் ,
  84. திரு.கே.குணசேகரன்,
  85. திரு.முருகதாஸ்,
  86. திரு.தமிழநம்பி,
  87. திரு.எழில் இளங்கோ,
  88. திரு.கோ.தாமரைக்கோ,
  89. திரு.சிவ.இளங்கோ,
  90. திரு.யாழினி சந்திரசேகர்,
  91. பேராசிரியர் உரு.அசோகன்,
  92. திரு.கமலச்செல்வம்,
  93. திரு.மு.சின்னமருது,
  94. திரு.மோசஸ்,
  95. திரு.பூராசாமி,
  96. திரு.செந்தமிழினியன்,
  97. திரு.அருணன்,
  98. திரு.ச.குணசேகரன்,
  99. திரு.சி,சேகர்,
  100. திரு.கலைச்செழியன்.

இப்பயிற்சிப் பட்டறையில் கலந்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம். இன்னும் பல பயிற்சிப் பட்டறைகள் நடத்த உள்ளோம். கிராம அளவில் சிறு சிறு குழுக்களாக அமைத்து அவர்களுக்கும் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம்.

வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ் மொழி முன்னேடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.

இரா.சுகுமாரன்,

ஒருங்கிணைப்பாளர்,

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்,

உலாபேசி: + 91 94431 05825

மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com

“தமிழ்வெளி” நிறுவனத்திற்கு நன்றி!

புதுச்சேரியில் வரும் திசம்பர் 9 ஞாயிறன்று நடைபெற உள்ள தமிழ்க் கணினி – வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறைக்கு உதவும் நோக்கோடு “தமிழ்வெளி” (திரட்டி) நிறுவனம் ரூபாய் 5,000/- (ரூபாய் ஐந்து ஆயிரம்) நன்கொடையாக வழங்கியுள்ளது.

பயிற்சிப் பட்டறைக்கு ஆதரவளித்து, நன்கொடை அளித்தது குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறோம். “தமிழ்வெளி” நிறுவனத்திற்கு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் இரா.இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி!

புதுச்சேரியில் வரும் திசம்பர் 9 ஞாயிறன்று தமிழ்க் கணினி – வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை நடைபெற உள்ளது. இப்பட்டறை சிறப்பாக நடைபெற புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் திரு. இரா. இராதாகிருஷ்ணன் அவர்கள் உதவ முன்வந்துள்ளார்.

சற்குரு உணவக அரங்கம் மற்றும் உணவு ஆகியவற்றின் செலவுகளைத் தன் பொறுப்பில் செய்ய உறுதி அளித்துள்ளார். பயிற்சிப் பட்டறைக்கு ஆதரவளித்தது குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறோம். சட்டப்பேரவைத் தலைவர் திரு. இரா. இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

“ஹோப்” நிறுவனத்திற்கு நன்றி!

புதுச்சேரியில் வரும் திசம்பர் 9 ஞாயிறன்று நடைபெற உள்ள தமிழ்க் கணினி – வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறைக்கு உதவும் நோக்கோடு புதுச்சேரியில் செயல்பட்டு வரும் “ஹோப்” நிறுவனம் ரூபாய் 10,000/- (ரூபாய் பத்து ஆயிரம்) நன்கொடையாக வழங்கியுள்ளது.

பயிற்சிப் பட்டறைக்கு ஆதரவளித்து, நன்கொடை அளித்தது குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறோம். “ஹோப்” நிறுவனத்திற்கு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறையில் துணைவேந்தர் பொன்னவைக்கோ பங்கேற்கிறார்

புதுச்சேரியில் வரும் திசம்பர் 9 ஞாயிறன்று நடைபெற உள்ள வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறையின் நிறைவு விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு பொன்னவைக்கோ அவர்கள் பங்கேற்க ஒப்புதல் அளித்துள்ளார்.

 திரு பொன்னவைக்கோ அவர்கள் தமிழகத்தில் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் என்பதும், இணையத்தில் தமிழ் மொழி உரிய இடம்பெற பங்காற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. திரு பொன்னவைக்கோ அவர்கள் இப்பயிற்சிப் பட்டறையில் கலந்துக் கொண்டு உரையாற்றுவது அனைவருக்கும் பயனளிக்கும்.

 பயிற்சிப் பட்டறையில் கலந்துக் கொள்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளமைக்கு அவருக்கு “புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்” நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

புதுச்சேரியில் வலைப்பதிவர்களுக்கான பயிற்சிப் பட்டறை

  • “ தமிழ்க் கணினி ” வலைப்பதிவர் பங்கேற்கும் பயிற்சிப் பட்டறை – கலந்தாய்வுக் கூட்டம்  
  • நாள்: 09-09-௨007, ஞாயிற்றுக்கிழமை,
  • காலம்: சரியாக மாலை 5.00 மணி
  • இடம்: பிலால் உணவகம்,                                                                      அண்ணா சாலை, புதுச்சேரி.1

 வணக்கம், கணினியில் தமிழ்ப் பயன்பாடு குறித்து புதுச்சேரியில் ”தமிழ்க் கணினி” என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தலாம் என எண்ணியுள்ளோம். இப்பயிற்சியானது கணினியில் முறையாகப் பயிற்சி பெறாதவர்களை நோக்கியதாகும். முறையாக பயின்றவர்கள், பயிற்சிப் பெற்றவர்கள் கூட கணினியைத் தமிழில் பயன்படுத்துவதில்லை.

தமிழில் தட்டச்சு செய்தால் மட்டுமே தமிழில் கணினியில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சிகளை அறிந்திருக்கிறார்கள் என்றும், அதனை பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறிவிட முடியாது. பலருக்குத் தமிழில் கணினியில் ஏற்பட்டிருக்கும் மிகவேகமான வளர்ச்சிப் பற்றி போதிய அறிமுகம் இல்லாமலேயே உள்ளது. எனவே, தமிழ் மொழியில் கணினியில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சிகளை அனைவருக்கும் தெரிவிக்கும் நோக்கத்தோடு இப்பயிற்சிப் பட்டறையை முதற்கட்டமாக நடத்தலாம் என எண்ணுகிறோம். இந்த பயிற்சிப் பட்டறையில் தமிழில் கிடைக்கும் மென் பொருட்களை அறிமுகம் செய்வது, அதனை கணினியில் நிறுவுவது, தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது, தமிழில் இணைய தளங்களில், வலைப்பூக்களில் எழுதுவது உட்பட தமிழ்க் கணினி தொடர்பான தொழிற்நுட்பங்கள் குறித்துப் பயிற்சி அளிப்பதன் மூலம் கணினியில் தமிழ்ப் பயன்பாட்டை மேலும் அதிகப்படுத்தலாம். இப்பயிற்சிப் பட்டறையை சிறப்பாக நடத்த தமிழ் ஆர்வலர்கள், கணினி ஆர்வலர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து அதன் வழிகாட்டலின் படி செயல்பட தீர்மானித்துள்ளோம்.

 இதற்கான முதற்கட்ட கலந்தாய்வுக் கூட்டம் மேற்கண்டவாறு நடைபெற உள்ளது. தாங்கள் இக்கூட்டத்தில் தவறாது குறித்த நேரத்தில் கலந்து கொண்டு, தங்கள் மேலான கருத்துக்களை வழங்கி, செம்மொழிக்கு கணினித் தமிழ் மூலம் மேலும் சிறப்பு சேர்க்க ஆதரவுதர வேண்டுகிறோம்.

தமிழ்க் கணினிக்காக,

இரா.சுகுமாரன்

தொடர்புக்கு: இரா.சுகுமாரன்  +919443105825 .

மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com