Archive

Archive for the ‘தமிழ்க் கணினி’ Category

தமிழ் எழுத்து வடிவ மாற்றம் எதிர்ப்பு மாநாடு- நிகழ்ச்சி நிரல்

தமிழ் எழுத்து வடிவ மாற்றம் எதிர்ப்பு மாநாடு

16-05-2010  ஞாயிறு

காலை 10 முதல் மாலை 6 மணிவரை

வணிக அவை (பாரதி பூங்கா எதிரில்), புதுச்சேரி

…………………………………………

தமிழ் எழுத்து வடிவ மாற்றம் எதிர்ப்பு மாநாடு

தொடக்க நிகழ்வு

காலை 10.00 மணி முதல் 11.30 மணிவரை

தலைமை”

திரு.இரா.சுகுமாரன் அவர்கள்

ஒருங்கிணைப்பாளர், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

வரவேற்பு:

திரு.ஏ.வெங்கடேஷ் அவர்கள்,

திரட்டி

மாநாட்டைத் தொடக்கி வைத்து உரை:

முதுமுனைவர் -செந்தமிழ் அந்தணர்- கழக இலக்கிய செம்மல்

திரு. இரா. இளங்குமரனார் அவர்கள்

நூல் வெளியீடு:

தமிழ் வரிவடிவ சீர்திருத்தமா? சீரழிப்பா?.

தொகுப்பு: புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள்

வெளியிடுபவர் :

பேராசிரியர் ம. இலெ.தங்கப்பா அவர்கள்

முதல் படி பெறுபவர்

திரு கோ.சுகுமாரன்

செயலர், மக்கள் உரிமைக்கூட்டமைப்பு – பொதுக்குழு உறுப்பினர், உத்தமம், (INFITT).

முற்பகல் 11.30 மணி முதல் 1.30 மணிவரை

முதல் அமர்வு

தலைமை

பேராசிரியர் நா.இளங்கோ அவர்கள், புதுச்சேரி

முன்னிலை:

திரு ஓவியர் இரா.இராசராசன் அவர்கள்

திரு ம.இளங்கோ, அவர்கள்

திரு க. அருணபாரதி அவர்கள்,

மென்பொருள் வல்லுநர்,

கருத்துரை:

திரு.இராம.கி அவர்கள் பொறியாளர்

பொதுக்குழு உறுப்பினர், உத்தமம் INFITT), சென்னை

திரு மணி.மு.மணிவண்ணன் அவர்கள், பொறியாளர் சென்னை,

முனைவர் சொ.சங்கரபாண்டி அவர்கள்

தமிழ்மணம்- வலைப்பதிவுகளின் திரட்டி, அமெரிக்கா,

திரு விருபா.குமரேசன் அவர்கள்

விருபா.காம், சென்னை

———————————————

உணவு இடைவேளை: பகல் 1.30 மணிமுதல் 2.30 மணிவரை

மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

———————————————

பிற்பகல் அமர்வு

பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை

தலைமை:

திரு.தமிழ நம்பி அவர்கள்

விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்பு

முன்னிலை:

திரு.வீரமோகன் அவர்கள்

திரு. சீத்தா .பிரபாகரன் அவர்கள்,

திரு.ஓவியர்,பா.மார்கண்டன் அவர்கள்

கருத்துரை:

பேராசிரியர். செல்வக்குமார் அவர்கள்,

வாட்டலூ பல்கலைக்கழகம். கனடா,

திரு. நாக.இளங்கோவன், சவுதி அரேபியா,

திரு. மா,பூங்குன்றன் அவர்கள்,

தென்மொழி, சென்னை.

திரு.சுப.நற்குணன் அவர்கள், மலேசியா,

திரு, சீனு,அரிமாப்பாண்டியன் அவர்கள்,

செயலர், தனித்தமிழ்க் கழகம, புதுச்சேரி,

திரு. க.தமிழமல்லன் அவர்கள்

தலைவர், தனித் தமிழ் இயக்கம் புதுச்சேரி,

திரு.ந.மு தமிழ்மணி அவர்கள்

அமைப்பாளர் , செந்தமிழர் இயக்கம்,புதுச்சேரி

திரு. கோ.தாமரைக்கோ அவர்கள்,

பாவலர் அரங்க. நடராசன் அவர்கள்

தமிழ்வளர்ச்சி நடவடிக்கைக்குழு, புதுச்சேரி

திரு. ப. திருநாவுக்கரசு அவர்கள்

தலைவர், நண்பர்கள் தோட்டம், புதுச்சேரி

திரு. எழில் . இளங்கோ அவர்கள்

தமிழியக்கம், விழுப்புரம்,

நிறைவு நிகழ்வு

மாநாட்டு நிறைவுரை:

பேராசிரியர் ம. இலெ.தங்கப்பா அவர்கள்

நன்றியுரை:

திரு. இரா. மோகனகிருஷ்ணன் அவர்கள்

புதுவை.காம்

வெளிநாடுகளில் இருந்து உரையாற்றும் அறிஞர்களின் உரை இணைய வழியாக  நேரடியாக ஒளி/ஒலிபரப்பப்படும்.

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

20,4- வது தெரு விரிவாக்கம், அன்னைதெரசா நகர்

மூலக்குளம் புதுச்சேரி -605010.பேசி: +91 94431 05825

மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com, இணையம் : www.pudhuvaitamilbloggers.org

வலைப்பூ : www.puduvaibloggers. blogspot.com

தமிழ்க் கணினியும் இணையப் பயன்பாடும் கருத்தரங்கம் – நிறைவுற்றது

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “தமிழ்க் கணினியும் இணையப் பயன்பாடும்” தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மைய தமிழ்த்துறை பேராசிரியர் நா.இளங்கோ தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சி தொடக்கத்தில் சீத்தா பிரபாகரன் வரவேற்புரை நிகழ்த்தினார்

இரா.சுகுமாரன் வலைப்பதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் சிறகம் அமைப்பின் நோக்கம் பற்றியும் அதன் வளர்ச்சிகள் பற்றி எடுத்துரைத்தார்.


கோ.சுகுமாரன் “தமிழில் வலைப்பதிவுகள்” தொடங்குவது பற்றி கருத்துரையாற்றினார். வலைப்பதிவு உருவாக்குதலைப் பற்றியும் தமிழ் வலைப்பதிவு திரட்டியான “தமிழ்மணம்”, “தமிழ்வெளி”, “திரட்டி” உள்ளிட்ட தமிழ் வலைப்பதிவு திரட்டிகளில் இணைத்தால் மட்டுமே உங்கள் பதிவை அதிகமானோர் படிப்பர் என்பதையும் விளக்கினார்.

இரா.மோகனகிருஷ்ணன்

“தமிழில் எழுத்துருக்கள் வகைகள் பற்றி கருத்துரையாற்றுகிறார் தமிழில் எழுத்துருக்கள் பற்றியும், பல்வேறு வகைப்பட்ட வகைகள் பற்றியும் (யுனிகோடு, தாம், தாப் உள்ளிட்டவை) பற்றியும் தமிழ் விசைப்பலகை தமிழ் 99 பற்றியும் பொனடிக் எழுத்துக்கள் பயன்படுத்துவதில் உள்ள குறைகள் உள்ளிட்டவைகளை எடுத்துரைத்தார்.

க.அருணபாரதி

தமிழில் மென்பொருட்கள் தமிழில் மென்பொருட்கள் பற்றியும், விண்டோசு விஸ்டாவில் தமிழ், ஆபீஸ் 2007 இல் தமிழ் மற்றும் ஓப்பன் ஆபீஸ் ஆகியவற்றில் தமிழில் கருவிப் பட்டைகள் உள்ளதையும் தமிழர்களாகிய நாம் தமிழிலேயே இந்த மென்பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அருணபாரதி தான் உருவாக்கிய தமிழில் தட்டச்சு செய்வதற்கான மென்பொருளை நிறுவி தமிழ் தட்டச்சு செய்து காண்பித்தார். விஸ்டா, விண்டோசு 7 ஆகியவற்றில் தட்டச்சு செய்து காண்பித்தார். முதலில் தமிழ்-99 விசைப் பலகையில் இந்த மென்பொருள் உருவாக்கப் பட்டுள்ளது. சோதனையில் இருப்பதால் தேவையானோர் வாங்கி சோதித்து அறியலாம். பலர் இயக்கம் பற்றி திருப்தி தெரிவித்த பின்னர் வெளியிடலாம் என முடிவு செய்துள்ளோம்.

இந்த மென்பொருளின் உள்ளே என்ன “கோடிங்” பயன்படுத்தப் பட்டுள்ளது என்பது வெளிப்படையாக அறிவிக்கப்படும். அல்லது தேவையானோருக்கு அளிக்கப்படும். இதில் தாங்கள் விரும்பியவாறு விசைப் பலகையை அவர் மாற்றி கொள்ளும் வகையிலும் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம். என அருண பாரதி தெரிவித்தார்.

எ.சீனுவாசன் மற்றும் நித்தியக்குமார் தமிழில் இயங்கு தளங்கள் விண்டோஸ் எக்ஸ்.பி, விஸ்டா, உபுண்டு உள்ளிட்டவைகளை தமிழில் பயன்படுத்துவது தொடர்பாக விளக்கினர். நித்தியகுமார் உபுண்டு இயங்குதளத்தை கணினியில் நிறுவி அதில் தமிழ் பயன்பாடு பற்றி பேசினார்.

சீனுவாசன் பாதுகாப்பான இணையப் பயன்பாடு குறித்து கவனமாக இருக்க வேண்டிய விசயங்கள் பற்றியும் தெரிவித்தார்.

இதில் விழுப்புரம், கடலூர், விருத்தாசலம், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் தமிழ நம்பி வலைப்பதிவர் பட்டறை நடத்தப்பட்டதால் பயன் பெற்றோர்களைப் பற்றியும் தங்கள் பகுதியின் வலைப்பதிவர்கள்  பற்றியும்எடுத்துரைத்தார்.

வருகை தந்த அனைவருக்கும் தமிழ்மணம் ஏற்பாடு செய்து அளித்த துண்டறிக்கையும், தமிழ்மணம் பெயர் பதித்த எழுதுகோலும் வழங்கப்பட்டது,

நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழுனர்

தமிழ்க் கணினியும் இணையப் பயன்பாடும் புதுச்சேரியில் கருத்தரங்கம் (23-01-2010)

தமிழ்க் கணினியும் இணையப் பயன்பாடும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் வரும் 23-01-2010 அன்று மாலை 5.30 மணி அளவில் புதுச்சேரி வணிக அவையில் நடைபெற உள்ளது.

புதிதாக வலைப்பதிவர்களை உருவாக்கும் முயற்சியாக அவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு வகையான தகவல்களை அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. puduvai bloggers

கோ.சுகுமாரன் “தமிழில் வலைப்பதிவுகள்” என்ற தலைப்பில் கருத்துரையாற்றுகிறார். வலைப்பதிவு உருவாக்குதலை செயல் விளக்கமாக செய்து காண்பிப்பது, தமிழ் வலைப்பதிவு திரட்டியான “தமிழ்மணம்”, “தமிழ்வெளி”, “திரட்டி” உள்ளிட்ட தமிழ் வலைப்பதிவு திரட்டிகளைப் பற்றியும் அவை தமிழ் வலைப்பதிவர்களுக்கு பயன்படும் விதம் பற்றியும் விளக்கப்படும்.

இரா.மோகனகிருஷ்ணன் “தமிழில் எழுத்துருக்கள் அதன் பயன்பாடுகள்” கருத்துரையாற்றுகிறார் தமிழில் எழுத்துருக்கள் பற்றியும், பல்வேறு வகைப்பட்ட வகைகள் பற்றியும் (யுனிகோடு, தாம், தாப் உள்ளிட்டவை) பற்றியும் தமிழ் விசைப்பலகை தமிழ் 99 பற்றியும் பொனடிக் எழுத்துக்கள் பயன்படுத்துவதில் உள்ள குறைகள் உள்ளிட்டவைகளை எடுத்துரைப்பார்.

க.அருணபாரதி தமிழில் மென்பொருட்கள் தமிழில் மென்பொருட்கள் பற்றியும், குறிப்பாக தமிழ் தட்டச்சு செய்வதற்கான மென் பொருட்கள் பற்றிய தகவல்கள் அளிப்பார். அவர் புதிதாக உருவாக்கிய தமிழ் தட்டச்சு செயலியை சோதனை செய்து விளக்குவார். ஏ-கலப்பை, என்.எச்.எம் எழுதி, குறள் மென்பொருள், உள்ளிட்ட மென்பொருட்களை பயன்படுத்தி தமிழ் உள்ளீடு செய்வது தொடர்பாக விளக்கமளிப்பார்.

எ.சீனுவாசன் மற்றும் நித்தியக்குமார் தமிழில் இயங்கு தளங்கள் விண்டோஸ் எக்ஸ்.பி, விஸ்டா, உபுண்டு உள்ளிட்டவைகளை தமிழில் பயன்படுத்துவது தொடர்பாக விளக்குவார்கள். மைக்ரோசாப்ட் 2003, 2007, ஓப்பன் ஆபிஸ் ஆகியவற்றில் தமிழை உபயோகிப்பதற்கான வழிமுறைகள் கருவிப்பட்டைகள் ஆகியவற்றை தமிழில் வைத்துக்கொள்வது பற்றிய விளக்கம் ஆகியவை விளக்கப்படும்.

மேலும் பல்வேறு தகவல்களை இன்னும் பலர் வழங்க உள்ளனர்

அனைவரும் வருகை தர வேண்டுகிறோம்.

இந்த நிகச்சிக்கு

தலைமை : பேராசிரியர் நா.இளங்கோ

வரவேற்பு : சீத்தா பிரபாகரன்

முன்னிலை: மகரந்தன், தமிழநம்பி,இராசராசன், வெங்கடேஷ்

தொடக்கவுரை: இரா.சுகுமாரன்

நன்றி: ம.இளங்கோ

அனைவரும் வருக.

மேலும் விவரங்களுக்கு :

இரா.சுகுமாரன்

ஒருங்கிணைப்பாளர்

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

+91 9443105825

மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com

வலைப்பூ : http://puduvaibloggers.blogspot.com (புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்)

புதுச்சேரியில் வலைப்பதிவர்களுக்கான பயிற்சிப் பட்டறை

  • “ தமிழ்க் கணினி ” வலைப்பதிவர் பங்கேற்கும் பயிற்சிப் பட்டறை – கலந்தாய்வுக் கூட்டம்  
  • நாள்: 09-09-௨007, ஞாயிற்றுக்கிழமை,
  • காலம்: சரியாக மாலை 5.00 மணி
  • இடம்: பிலால் உணவகம்,                                                                      அண்ணா சாலை, புதுச்சேரி.1

 வணக்கம், கணினியில் தமிழ்ப் பயன்பாடு குறித்து புதுச்சேரியில் ”தமிழ்க் கணினி” என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தலாம் என எண்ணியுள்ளோம். இப்பயிற்சியானது கணினியில் முறையாகப் பயிற்சி பெறாதவர்களை நோக்கியதாகும். முறையாக பயின்றவர்கள், பயிற்சிப் பெற்றவர்கள் கூட கணினியைத் தமிழில் பயன்படுத்துவதில்லை.

தமிழில் தட்டச்சு செய்தால் மட்டுமே தமிழில் கணினியில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சிகளை அறிந்திருக்கிறார்கள் என்றும், அதனை பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறிவிட முடியாது. பலருக்குத் தமிழில் கணினியில் ஏற்பட்டிருக்கும் மிகவேகமான வளர்ச்சிப் பற்றி போதிய அறிமுகம் இல்லாமலேயே உள்ளது. எனவே, தமிழ் மொழியில் கணினியில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சிகளை அனைவருக்கும் தெரிவிக்கும் நோக்கத்தோடு இப்பயிற்சிப் பட்டறையை முதற்கட்டமாக நடத்தலாம் என எண்ணுகிறோம். இந்த பயிற்சிப் பட்டறையில் தமிழில் கிடைக்கும் மென் பொருட்களை அறிமுகம் செய்வது, அதனை கணினியில் நிறுவுவது, தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது, தமிழில் இணைய தளங்களில், வலைப்பூக்களில் எழுதுவது உட்பட தமிழ்க் கணினி தொடர்பான தொழிற்நுட்பங்கள் குறித்துப் பயிற்சி அளிப்பதன் மூலம் கணினியில் தமிழ்ப் பயன்பாட்டை மேலும் அதிகப்படுத்தலாம். இப்பயிற்சிப் பட்டறையை சிறப்பாக நடத்த தமிழ் ஆர்வலர்கள், கணினி ஆர்வலர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து அதன் வழிகாட்டலின் படி செயல்பட தீர்மானித்துள்ளோம்.

 இதற்கான முதற்கட்ட கலந்தாய்வுக் கூட்டம் மேற்கண்டவாறு நடைபெற உள்ளது. தாங்கள் இக்கூட்டத்தில் தவறாது குறித்த நேரத்தில் கலந்து கொண்டு, தங்கள் மேலான கருத்துக்களை வழங்கி, செம்மொழிக்கு கணினித் தமிழ் மூலம் மேலும் சிறப்பு சேர்க்க ஆதரவுதர வேண்டுகிறோம்.

தமிழ்க் கணினிக்காக,

இரா.சுகுமாரன்

தொடர்புக்கு: இரா.சுகுமாரன்  +919443105825 .

மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்திற்கு புதிய இணைய தளம்

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் <a href=”http://pudhuvaitamilbloggers.org/”> புதிய இணைய தளம் </a> புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறை நடத்த திட்டமிடுவதற்கு முன்பாக பதிவு செய்வதற்காகவும், நிர்வகிப்பதற்கும் ஒரு தளம் தேவை என்றும், அதற்கான புதிய தளம் ஒன்றும் தொடங்குவது என திட்டமிட்டிருந்தோம். ஆனால், பின்னர் அது தேவையில்லை என்று முடிவு செய்தோம்.

அதன்பின் நண்பர் வெங்கடேஷ் புதுச்சேரியில் நடத்தி வரும் <a href=”http://top10.tooriga.com/”>தூரிகா</a> இணைய தளத்தில் பதிவு செய்யலாம் என்று ஒரு படிவம் செய்து அனுப்பி இருந்தார், இதனால் அதில் புதிய பதிவர்களை பதிவு செய்யலாம் என முடிவு செய்திருந்தோம். ஆனால், அனைத்து தமிழ்ப் பதிவர்களும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும், ஊர் வாரியாக பிரிந்து இருக்க வேண்டாம் என்றும் ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது.

 இதனால் <a href=”http://tamilbloggers.org/”>தமிழ் வலைப்பதிவர் பட்டறை </a> தளத்தை பயன்படுத்தலாம் என்று கருதியிருந்தோம். அது இயலாமல் போனதால் மீண்டும், தூரிகா இணைய தளத்தில் பதிவைத் தொடங்குவது என முடிவு செய்து அதில் பதிவு செய்திருக்கிறோம்.

இந்நிலையில் திரு முகுந்த் அவர்களை பதிவர் பட்டறையில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்திருந்தோம். எங்கள் பதிவு “பிளாக்” இல் இருந்ததால் <a href=”http://pudhuvaitamilbloggers.org/”> புதிதாக ஒரு இணைய தளம் </a> ஒன்றை பதிவு செய்து <a href=”http://thamizhasystems.in/”> தமிழா சிஸ்டம் நிறுவனத்தின் </a> சார்பாக எங்கள் வலைப்பதிவர் சிறகத்திற்கு அன்புடன் வழங்கியுள்ளார்.

அத்துடன் எங்கள் வலைப்பதிவர் சிறகத்திற்கு குறிப்பேடுகளை தன் செலவில் வழங்கவும் முன்வந்துள்ளார். அவருக்கு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்மணம் நிர்வாகத்திற்கு நன்றி

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் வரும் டிசம்பர் 9 அன்று ஒருநாள் பயிற்சிப் பட்டறை நடத்த உள்ளதை அறிந்திருப்பீர்கள். கணினியில் தமிழின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக கணினியில் தமிழில் கிடைக்கும் மென்பொருட்களின் தொகுப்பை இலவசமாக வழங்கி பயிற்சி அளிப்பது எனத் திட்டமிட்டுள்ளோம். அந்த முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையில் தமிழ்மணம் நிர்வாகம் எங்களுக்கு ரூபாய் 10,000/- (ரூபாய் பத்து ஆயிரம்) நன்கொடையாக வழங்கியுள்ளது குறித்து நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும், ஞாலத்தின் மாணப் பெரிது. … என்று எங்கள் தமிழ்த் தாத்தா சொன்னது போல, இது மிகப் பெரிய உதவியாகவும், நாங்கள் கேட்காமலேயே மனமுவந்து அளித்துள்ளமையால் இதனை அதைவிட பெரியதாக நாங்கள் கருதுகிறோம்.

தமிழ்மணம் குழுவிற்கு, புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி

இரா.சுகுமாரன்,                                                                        ஒருங்கிணைப்பாளர்                                                                                                  புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்