புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் | தமிழும் சமூக அக்கறையும் எங்களை இணைத்துள்ளன.

புதுச்சேரி தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம் நிகழ்ச்சி நிரல்

தமிழ்க் கணினி விழிப்புணர்வு

முகாம் நாள் : 17.02.2013 ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 9.30 முதல் 5.30 மணி வரை

இடம் : மக்கள் தலைவர் வ.சுப்பையா இல்லம்,

66. கடலூர் சாலை, முதலியார் பேட்டை, புதுச்சேரி -605 004.

தொடக்க விழா

காலை 9.30 மணிக்கு

‘தமிழா’ தமிழ் மென்பொருள் குறுந்தட்டு வெளியீடு:

மாண்புமிகு திரு. தி. தியாகராசன் அவர்கள் மின்துறை அமைச்சர், புதுச்சேரி அரசு.

அமர்வு :1 காலை 10.30 முதல் 11.15 வரை

தமிழில் இயங்குதளம்: விண்டோசு, லினக்சு (Ubuntu), தமிழில் எம்.எசு ஆபீசு, ஓப்பன் ஆபீசு, தமிழில் இணைய உலாவிகள் (Web Browsers), ஒருங்குகுறி, TAM, TAB, TSCII TACE-16 தமிழ் எழுத்துக் குறியீட்டு முறைகள், குறியீடு மாற்றம்

திரு. இரா.சுகுமாரன், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம். பிரசன்னா. வெங்கடேசு, புதுச்சேரி லினக்சு பயன்பாட்டாளர்கள்.

அமர்வு 2: காலை 11.15 முதல் 11.30 வரை

தமிழில் தட்டச்சு மென் பொருட்கள் நிறுவல் மற்றும் பயன்படுத்துதல். திரு. க. அருணபாரதி , மென்பொருள் வல்லுநர்.

காலை 11.30 முதல் 11.45 வரை

தேநீர் இடைவேளை

அமர்வு 3: காலை 11.45 முதல் 12.30 வரை

வலைப்பதிவு செய்தல்: பிளாக், வேர்டு பிரசு, பிற…

பேராசிரியர் நாக. இளங்கோ காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம் புதுச்சேரி

அமர்வு 4: பகல் 12.30 முதல் 1.15 வரை

கைப்பேசியில் தமிழ் பயன்படுத்துவது. ஆன்ட்ராய்டு, பிற…

முனைவர். வி. கிருஷ்ணமூர்த்தி பேராசிரியர்

ஓய்வு அண்ணா பல்கலைக்கழகம் சென்னை

திரு.செல்வ.முரளி, கணினி பொறியாளர் சிஇஓ, விசுவல்மீடியா டெக்னாலஜிஸ், கிருஷ்ணகிரி

பகல் 1.16 முதல் 2.00 வரை

உணவு இடைவேளை

அமர்வு 5: பிற்பகல் 2.00 முதல் 2.30 வரை

திரட்டிகளின் பயன்பாடு: தமிழ்மணம்,

தமிழ்வெளி,திரட்டி கைப்பேசியில் தமிழ் பயன்படுத்துவது. ஆன்ட்ராய்டு, பிற…

திரு. ஏ. வெங்கடேசு , நிறுவனர், திரட்டி.

அமர்வு 6: பிற்பகல் 2.30 முதல் 3.15 வரை

தமிழில் மின்னஞ்சல், அரட்டை, சமுக வலைத்தளங்கள்: முகநூல், டிவிட்டர்,

கூகுல் பிளசு திரு. கோ.சுகுமாரன் செயலர், மக்கள் உரிமைக்கூட்டமைப்பு

அமர்வு 7: பிற்பகல் 3.15 முதல் 3.30 வரை

தமிழில் மின்னூல் உருவாக்குதல்

பேராசிரியர் நாக. இளங்கோ

காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம் புதுச்சேரி

அமர்வு 8: பிற்பகல் 3.30 முதல் 4.15 வரை

கட்டற்ற மென்பொருட்கள் (open source software)

த. சீனிவாசன், – கணியம் மின்னிதழ் – ஆசிரியர்.

அமர்வு 9: பிற்பகல் 4.15 முதல் 4.30 வரை

தமிழில் கிடைக்கும் பல்வேறு மென் பொருட்கள், தமிழ் தொடர்பான பிற…

திரு. தமிழநம்பி , விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்பு

தேநீர் இடைவேளை

பிற்பகல் 4.30 முதல் 4.45 வரை

நிறைவு விழா: மாலை 4.45 மணி

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றம்

இணையம்: www.pudhuvaitamilbloggers.org/ வலைப்பூ:www.puduvaibloggers.blogspot.com/

புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் மற்றும் புதுச்சேரி கலை இலக்கிய பெருமன்றம் இணைந்து  தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.

 நிகழ்ச்சி நாள்: 17-02-2013 ஞாயிறு,  காலை 9.30 மணி முதல்… (காலை 9.15 மணிக்கு பதிவு தொடங்கப்படும்).

இடம் :மக்கள் தலைவர் வ.சுப்பையா இல்லம், 66. கடலூர் சாலை, முதலியார் பேட்டை, புதுச்சேரி -605 004. நிகழ்ச்சி காலை 9.30 மணிக்கு தொடங்கும்.

இந்த நிகழ்ச்சியில் தமிழா நிறுவனத்தின் குறுந்தகடு வெளியிடப்படும், இதனைத் தொடர்ந்து  தமிழ்க் கணினி தொடர்பாக கீழ்க்கண்டவைகள் பற்றிய  விளக்கம் அளிக்கப்படும்.

 1. தமிழில் இயங்குதளம்: விண்டோசு மற்றும் லினக்சு (Ubuntu),
 2. தமிழில் எம்.எசு ஆபீசு, ஓப்பன் ஆபீசு,
 3. கட்டற்ற மென்பொருட்கள் (open source software)
 4. கைப்பேசியில் தமிழ் பயன்படுத்துவது. ஆன்ட்ராய்டு, பிற..
 5. தமிழில்  இணைய உலவிகள் ( Web Browsers)
 6. ஒருங்குகுறி பற்றிய விளக்கம்,
 7. தமிழில் தட்டச்சு மென் பொருட்கள்  நிறுவல் மற்றும் பயன்படுத்துதல்,
 8. தமிழில் மின்னஞ்சல், அரட்டை,
 9. வலைப்பதிவு செய்தல்: பிளாக், மற்றும் வேர்டு பிரசு,
 10. திரட்டிகளின் பயன்பாடு: தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி உள்ளிட்டவைகளில் இணைப்பு அதன் பயன்பாடு,
 11. சமுக வலைத்தளங்களில் பதிவு செய்தல்: முகநூல், டிவிட்டர், கூகுல் பிளசு
 12. தமிழில் கிடைக்கும் பல்வேறு மென் பொருட்கள்.

இந்த நிகழ்ச்சியில் பதிவு செய்து பங்கேற்பவர்களுக்கு தமிழ் மென்பொருட்கள்  அடங்கிய குறுந்தகடு, மற்றும் குறிபேடு,  எழுதுகோல், பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். காலை மற்றும் பிற்பகலில் தேநீர், மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. எத்தனைபேர் வருவார்கள் திட்டமிட வசதியாக  இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கு பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்ய விரும்புகிறவர்கள் இந்த  பதிவுப் படிவத்தினை கிளிக் செய்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பதிவுக் கட்டணமாக மாணவர்களுக்கு ரூ 50/- பணி செய்பவர்களுக்கு ரூ 100/- செலுத்த வேண்டும். இந்த பயிலரங்கில் பங்கேற்க இந்த படிவத்தின் பதிவு நிபந்தனைக்கு உட்டது.

பதிவு செய்தவர்கள் உரிய நேரத்தில் வருகை தரவேண்டும். 9.15 முதல் 9.30 வரை பதிவு நேரமாகும். பதிவு நேரத்திற்கு பின் வருபவர்களின் இடம் மற்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.

மேலும் விவரங்களுக்கு : இரா.சுகுமாரன் 9443105825, எல்லை.சிவக்குமார்.  9843177943 என்ற  தொலை பேசியில் தொடர்பு கொள்க.

ஆண்டோ பீட்டருக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி: தினமலர் செய்தி

புதுச்சேரி:புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பில், மறைந்த தமிழ்க் கணினி வல்லுனர் ஆண்டோ பீட்டருக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி, வணிக அவையில் நடந்தது.
வலைப்பதிவர் சிறக ஒருங்கிணைப்பாளர் சுகுமாறன் தலைமை தாங்கினார். ஆண்டோ பீட்டர் தமிழுக்கு ஆற்றிய பணிகள், மென்பொருள் தயாரிப்பு, இணையப் பக்கம் வடிவமைப்பில் அவரது சேவைகள், பல்லூடகக் கல்வியில் அவர் ஆற்றிய பணிகள் குறித்து, மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர் சுகுமாறன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் அஷ்ரப், பெற்றோர் மாணவர் நலச்சங்கத் தலைவர் பாலா உள்ளிட்ட பலர் பேசினார். ஆண்டோ பீட்டருக்கு, நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=513772&Print=1

ஆண்டோ பீட்டர் நினைவஞ்சலி நமது முரசு செய்தி

புதுவையில் தமிழ்க் கணினி வல்லுநர் ஆண்டோ பீட்டருக்கு நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது இதில் பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்களும் தமிழறிஞர்களும் நினைவஞ்சலி செலுத்தினர்

ஆண்டோ பீட்டர் நினைவஞ்சலி தினமணி புகைப்படம்

தமிழ்க் கணினி வல்லுநர் ஆண்டோ பீட்டர் அவர்களுக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சியின் தினமணி புகைப்படம்

 

புதுச்சேரியில் ஆண்டோ பீட்டர் அவர்களுக்கு நினைவஞ்சலி

தமிழ்க் கணினி வல்லுநர் ஆண்டோ பீட்டர் அவர்களுக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி புதுச்சேரியில் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் ஆண்டோ பீட்டர் அவர்களின் நிழற்படத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன் தலைமை யேற்றார். மக்கள் உரிமைக்கூட்டமைப்பு செயலர் கோ.சுகுமாரன்,

காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய தமிழ்த் துறை பேராசிரியர் ந. இளங்கோ, கூகுல்  இந்தியா திரட்டி ஏ. வெங்கடேஷ்,

 

பெரியார் திராவிடர்க் கழக செய்தித் தொடர்பாளர் ம. இளங்கோ, பெரியார் திராவிடர்க் கழக பொருளாளர். வீர மோகன், சீத்தா பிரபாகரன்,

 

பாரதி தாசன் மகளிர் கல்லூரி பேராசிரியர்  மு.இளங்கோவன். தமிழர் தேசிய இயக்கம் இரா. அழகிரி, புரட்சியாளர் அம்பேத்கர் மக்கள் படை சி.மூர்த்தி, செந்தமிழர் இயக்க அமைப்பாளர் நா.மு தமிழ்மணி,

 

செம்படுகை நன்னீரகம் கு. இராம்மூர்த்தி, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவர் அஷ்ரப், புதுச்சேரி தமிழர் களம் தலைவர் கோ.பிரகாசு, பெற்றோர் மாணவர் சங்கத்தின் வை. பாலா, இலவச மென்பொருள் நிறுவன ஆர்வலர் முருகதாசு, கடலூர் முகுந்த், காளி,   உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.

புதுச்சேரியில் தமிழ்க் கணினி வல்லுநர் ஆண்டோ பீட்டர் நினைவஞ்சலிக் கூட்டம்

தமிழர்களிடையே தமிழ்க் கணினி குறித்து விழிப்புணர்வு செய்ய பல்வேறு நூல்களை எழுதியவரான ஆண்டோ பீட்டர் அவர்களுக்கு புதுச்சேரியில் நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 22-07-2012 அன்று காலை 9.30 மணியளவில் வணிக அவை சிறிய அரங்கத்தில் நடைபெற உள்ளது.

 

 இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரியின் பல்வேறு தமிழறிஞர்களும் தமிழ்க் கணினி ஆர்வலர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த உள்ளனர்

 தமிழ்க் கணினி குறித்த விழிப்புணர்வைத் தமிழர்களிடையே அதிகப்படுத்தியவர்களில் ஆண்டோ பீட்டரும் ஒருவர். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் 26.04.1967 இல் பிறந்தார்.கணினி, இணையம், அச்சுத்துறை சார்ந்த பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் ஆண்டோபீட்டர். மென்பொருள் தயாரிப்பு, இணையப் பக்கம் வடிவமைப்பில் ஈடுபட்டவர்.

 

தமிழகத்தில் முதன்முதலாகப் பல்லூடகக் கல்வியை அறிமுகப் படுத்திய இவர்இளைஞர்கள் வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்புமேம்பாட்டிற்காக500க்கும் மேற்பட்ட இலவச கருத்தரங்குகளை நடத்தியுள்ளார்.

 கணினி, தமிழ் தொடர்பான பல்வேறு மாநாடுகளில் கலந்து கொண்டிருப்பதுடன் 26 ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.

  அச்சு வடிவில் வந்து கொண்டிருக்கும் இதழ்களில் இருக்கும் படங்கள், செய்திகள் மற்றும் அனைத்துவிதமான படைப்புகளையும் இணைய தளங்களில் அச்சுஇதழ்களைப் போன்று பகுதிகளாகவும், பக்கங்களாகவும் அனைவரும் பார்க்கவும்படிக்கவும் உருவாக்கப்பட்ட இணைய இதழ்களில் முதல் தமிழ் இணைய இதழான “தமிழ்சினிமா” எனும் பெயரில் முதல் தமிழ் இணைய இதழைத் தொடங்கியவர்.  

 

கணினித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் இந்திய அரசு, தமிழ்நாடு அரசு அமைத்துள்ளசில குழுக்களில் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

 தமிழும் கணிப்பொறியும்எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு – 2004. நெய்வேலி புத்தகக்கண்காட்சியில் சிறந்த எழுத்தாளருக்கான விருது 2007.

 ஸ்ரீராம் நிறுவனத்தின் பாரதி இலக்கியச் செல்வர் விருது’, தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் பெரியார் விருது’. ஆகிய விருதுகளை பெற்றவர்.

 கணித்தமிழ் வளர்ச்சியின் முன்னோடியும், சி.எஸ்.சி, சாப்டுவியூ நிறுவனத்தின்  நிறுவனரும், கணித்தமிழ்ச்சங்கத்தை நிறுவிப் பணிபுரிந்தவரும், பல கணினிநூல்களின் ஆசிரியருமான மா.ஆண்டோபீட்டர் 12.07.2012 வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் காலமானார்.இவரின் மறைவு தமிழ்இணையத்துறைக்குப் பேரிழப்பாகும்.

புதுச்சேரியில் விக்கிப்பீடியா அறிமுகக் கூட்டம்

விக்கிப்பீடியா அறிமுகக் கூட்டம்

விக்கிப்பீடியா

இடம்: வணிக அவை சிறிய அரங்கம், நாள்: 20-02-2011

காலம்: காலை 10.00 மணிமுதல் பகல் 1.00 மணிவரை

தலைமை: இரா.சுகுமாரன், ஒருங்கிணைப்பாளர்,

(புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்)

நிகழ்ச்சி நிரல்: 10:00 – தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் அறிமுகம்

11:00 – விளக்கப் பயிற்சிகள்

12:00 – கலந்துரையாடல்

விக்கிப்பீடியாவை அறிமுகம் செய்து விளக்கம்:

அ.ரவிசங்கர், நிர்வாகி (விக்கிப்பீடியா-தமிழ்)

விக்கிப்பீடியா (http://ta.wikipedia.org) என்பது தளையற்ற உள்ளடக் கங்களைக் கொண்ட ஒரு இலவச கலைக்களஞ்சியமாகும் (encyclopedia). பலரின் கூட்டு முயற்சியால் பல மொழிகளில் கட்டமைக்கப்படும் கலைக்களஞ்சியமாகும். இது இலாபத்தை எதிர்நோக்காத விக்கிமீடியா அறக்கட்டளையின்  திட்ட ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

விக்கிப்பீடியா தமிழ் மொழி உள்பட மொத்தம் 279 மொழிகளில் உள்ளது. இதில் தமிழ் மொழியில் இதுவரை 28,023 கட்டுரைகள் உள்ளன. கட்டுரைகள் எண்ணிக்கை வரிசைபடி உலக மொழிகளில் தமிழ் மொழி 68-வது இடத்தில் உள்ளது. இந்திய மொழிகளில் இந்தி (67,589),  தெலுங்கு(47,386),  மராத்தி(32,598) மொழிகளுக்கு அடுத்த நிலையில் தமிழ் (28,036) கட்டுரைகள் இடம் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

இந்த விக்கிப்பீடியாவை நீங்களும் தொகுக்கலாம். தமிழ், பண்பாடு, வரலாறு, அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், புவியியல், சமூகம், நபர்கள் உள்ளிட்ட முக்கிய தலைப்புகளில் இதில் செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளது.

தமிழ் விக்கிபீடியா திட்டங்களை அறிமுகம் செய்து விளக்கப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். அதில் கலந்து கொண்டு பயன்பெறவும், தமிழ் விக்கிப்பீடியாவில் உங்கள் பங்களிப்பை செலுத்தவும் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

கைப்பேசி: 94431 05825, மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com,

வலைப்பூ:  http://puduvaibloggers.blogspot.com,

இணையதளம்: www.pudhuvaitamilbloggers.org

தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்களைச் சேர்க்கக் கூடாது புதுவைத் தமிழறிஞர்கள் மாநாட்டில் தீர்மானம் : தமிழோசை செய்தி

தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்களைச் சேர்க்கக் கூடாது

புதுவை தமிழறிஞர்கள் மாநாட்டில் தீர்மானம்

புதுச்சேரி, பிப்.1- தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்களை  சேர்க்க்க்கூடாது என்றும், 26 கிரந்த எழுத்துக்களை தமிழில் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையை ஒருங்குறி நிறுவனம் நிராகரிக்க வேண்டும் என்றும் புதுச்சேரியில் நேற்று முன்நாள் நடைபெற்ற தமிழ் ஒருங்குறியில் கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பில் நேற்று முன்நாள் வணிக அவை அரங்கில் ‘தமிழ் ஒருங்கு குறியில் கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாடு’ நடைபெற்றது. புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு திரட்டி பொறுப்பாளர் வெங்கடேசு முன்னிலை வகித்தார். மாநாட்டுக்கு வந்திருந்த அனைவரையும் மென்பொருள் வல்லுனர் க.அருணபாரதி வரவேற்றார்.

தமிழோசை, 01-02-2011

உத்தமம் பொதுக்குழு உறுப்பினர் பொறியாளர் இராம.கி, தென்மொழி ஆசிரியர் மா.பூங்குன்றன், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய தமிழ்த் துறை பேராசிரியர் நா.இளங்கோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, செந்தமிழர் இயக்க அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி, தமிழ்த்தமிழ் இயக்கத் தலைவர் க.தமிழமல்லன், இலக்கியக் பொழில் இலக்கிய மன்றத் தலைவர் பெ.பராங்குசம், புதுவை தமிழ் எழுத்தாளர் கழகப் பொறுப்பாளர் புதுவைத் தமிழ்நெஞ்சன், விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்புப் பொறுப்பாளர் தமிழநம்பி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.மாநாட்டை சென்னைப் பல்கலைக்கழக தமிழ் மொழித் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் தொடக்கி வைத்து உரையாற்றினார். மேலும், அவர் திரட்டி நிறுவனம் தயாரித்த கைபேசி மின்னூலினை வெளியிட்டார். அதன் முதல் படியை  மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் கோ.சுகுமாரன் பெற்றுக்கொண்டார்.

தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கத்தின் பொறுப்பாளர் இலக்குவனார் திருவள்ளுவன் நிறைவுரையாற்றினார். புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் அமைப்புக் குழு உறுப்பினர் ம.இளங்கோ நன்றி கூறினார்.

 • தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்களைச் சேர்க்கக் கூடாது என்பதோடு, 26 கிரந்த எழுத்துக்களை தமிழில் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையை ஒருங்குறி நிறுவனம் நிராகரிக்க வேண்டும்
 • எ, ஒ, ழ, ற, ன உள்ளிட்ட தமிழ் எழுத்துக்களைக் கிரந்த எழுத்தில் சேர்க்கக் கூடாது
 • தமிழக அரசின் கருத்தை அறிந்த பின்பே மத்திய அரசு கிரந்தம் தொடர்பான எந்த முடிவையும் எடுக்க வேண்டும் என இம்மாநாடு வற்புறுத்துகிறது.
 • இம்மாநாட்டில் கலந்துக் கொண்ட தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புத் தலைவர்கள், பார்வையாளர்கள் அனைவரும் கையொப்பமிட்ட மனு ஒன்றினை மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் திரு.கபில் சிபல், தமிழக முதல்வர் மு.கருணாநிதி, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் தலைவர் நீதிபதி மோகன்,  அமெரிக்காவிலுள்ள ஒருங்குறி நிறுவனம் ஆகியோருக்கு அனுப்பி வைப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் மாநாட்டுத் தீர்மானங்கள்


ஊடகச் செய்தி
30.01.2011

பேராசிரியர் நா.இளங்கோ
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பில் இன்று (30-01-2011) காலை 10.30 முதல் 1.30 வரை வணிக அவை அரங்கில் ‘தமிழ் ஒருங்கு குறியில் கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாடு’ நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். திரட்டி பொறுப்பாளர் வெங்கடேசு முன்னிலை வகித்தார். மாநாட்டுக்கு வந்திருந்த அனைவரையும் மென்பொருள் வல்லுனர் க.அருணபாரதி வரவேற்றார்.

இம்மாநாட்டை சென்னைப் பல்கலைக்கழக தமிழ் மொழித் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் தொடக்கி வைத்து உரையாற்றினார். மேலும், அவர் திரட்டி நிறுவனம் தயாரித்த கைபேசி மின்னூலினை வெளியிட்டார். அதன் முதல் படியை  மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் கோ.சுகுமாரன் பெற்றுக்கொண்டார்.

பேராசிரியர் தெய்வசுந்தரம் அவர்கள்


இராம.கி அவர்கள்

உத்தமம் பொதுக்குழு உறுப்பினர் பொறியாளர் இராம.கி, தென்மொழி ஆசிரியர் மா.பூங்குன்றன், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய தமிழ்த் துறை பேராசிரியர் நா.இளங்கோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, செந்தமிழர் இயக்க அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி, தமிழ்த்தமிழ் இயக்கத் தலைவர் க.தமிழமல்லன், இலக்கியக் பொழில் இலக்கிய மன்றத் தலைவர் பெ.பராங்குசம், புதுவை தமிழ் எழுத்தாளர் கழகப் பொறுப்பாளர் புதுவைத் தமிழ்நெஞ்சன், விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்புப் பொறுப்பாளர் தமிழநம்பி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

இரா.சுகுமாரன்
கோ.சுகுமாரன் அவர்கள்

தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கத்தின் பொறுப்பாளர் இலக்குவனார் திருவள்ளுவன் நிறைவுரையாற்றினார். புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் அமைப்புக் குழு உறுப்பினர் ம.இளங்கோ நன்றி கூறினார்.

மா.பூங்குன்றன் அவர்கள்
இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள்
  இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
 1. தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்களைச் சேர்க்கக் கூடாது. 26 கிரந்த எழுத்துக்களை தமிழில் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையை ஒருங்குறி நிறுவனம் நிராகரிக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
 2. எ, ஒ, ழ, ற, ன உள்ளிட்ட தமிழ் எழுத்துக்களைக் கிரந்த எழுத்தில் சேர்க்கக் கூடாது என ஒருங்கு குறி நிறுவனத்தை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
 3. தமிழக அரசின் கருத்தை அறிந்த பின்பே மத்திய அரசு கிரந்தம் தொடர்பான எந்த முடிவையும் எடுக்க வேண்டும் என இம்மாநாடு வற்புறுத்துகிறது.
 4. இம்மாநாட்டில் கலந்துக் கொண்ட தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புத் தலைவர்கள், பார்வையாளர்கள் அனைவரும் கையொப்பமிட்ட மனு ஒன்றினை மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் திரு.கபில் சிபல், தமிழக முதல்வர் மு.கருணாநிதி, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் தலைவர் நீதிபதி மோகன்,  அமெரிக்காவிலுள்ள ஒருங்குறி நிறுவனம் ஆகியோருக்கு அனுப்பி வைப்பது எனவும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.

இரா. சுகுமாரன், ஒருங்கிணைப்பாளர்.